

திருவண்ணாமலை: செய்யாறில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 350 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
தி.மலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். முகாமில் 884 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில்,350 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக அடையாள அட்டை மற்றும் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த முகாமில் செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், கோட்டாட்சியர் விமலா, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.