கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் கல்வி வழங்கப்படும் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் கல்வி வழங்கப்படும்  தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
Updated on
1 min read

கட்டுமானத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கினால் அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க நல வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் 5-ம் வகுப்பு படிக்கும் அறிவுக்கூர்மையான பிள்ளைகளை வட்டத்துக்கு ஒருவர் என தேர்வு செய்து, அந்தந்த பகுதியில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்த்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பத்தாம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை, மாவட்டத்துக்கு 3 மாணவிகள் உட்பட 10 மாணவர்களை தேர்வு செய்து, அந்தந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு கல்வி வழங்க ஆணையிடப் பட்டுள்ளது.

அதன்படி, 2020-21-ம் கல்வி யாண்டில் மாணவர்களை தேர்வு செய்து தனியார் பள்ளி மூலம் கல்வி வழங்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக் கலாம்.

திருவண்ணாமலை காந்தி நகர் 9-வது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் நேரில் வந்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in