

மதுரை அவனியாபுரம் எஸ்.ஐ. ஆதிகண்ணன் தலைமை யிலான போலீஸார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிஎன்எச்பி கால னியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசார ணையில், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா உசேன்(21), மகாராஜன்(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு ஒன்று கூடியிருந்ததாகத் தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.