நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 15 கடைசி

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 15 கடைசி
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிக்கை:பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. நடப்பாண்டில் இம்மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு 320 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு பிரிமியம் செலுத்த டிசம்பர் 15-ம்தேதி கடைசி நாளாகும். நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.444 காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணத்தை கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்மற்றும் சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து செலுத்த வேண்டும். கட்டணத் தொகை செலுத்திய ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in