Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

கீழ்பென்னாத்தூர் அருகே ராயம்பேட்டை கிராமத்தில் குடும்ப தகராறில் 2 மகள்களை அடித்து கொன்ற தந்தை மருத்துவமனையில் தாய் கவலைக்கிடம்

கீழ்பென்னாத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகள்கள் இருவரையும் நெசவு தொழிலாளி கடப் பாரையால் தாக்கியதில் மகள்கள் இருவரும் உயிரிழந் தனர். ஆபத்தான நிலையில் மனைவி, சிகிச்சை பெற்று வரும் நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நெசவுத் தொழி லாளியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவுத் தொழி லாளி முருகன் (38). இவரது மனைவி தேவிகா (28). இவர்களுக்கு மீனா (10), ஷிவானி (8) என்ற மகள்கள் இருந்தனர். இருவரும், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக தேவிகா, கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

தினசரி வேலைக்குச் சென்று விட்டு இரவு நேரத் தில் தாமதமாக வருவதால் தேவிகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகன் தினசரி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு தாமதமாக வந்த தேவிகாவிடம் முருகன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த முருகன், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து உறங் கிக் கொண்டிருந்த மகள்கள் இருவரையும் தாக்கியதுடன், மனைவி தேவிகாவையும் கடுமையாக தாக்கினார்.

இதில், இளைய மகள் ஷிவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந் தார். மனைவி, மகள்களை கடப்பாரையால் தாக்கி விட்டு முருகன் தப்பி ஓடினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தேவிகா, மீனா ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் பரி சோதனையில் வரும் வழி யிலேயே சிறுமி மீனா உயிரிழந்தது தெரியவந்தது. தேவிகாவுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தது டன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். இது தொடர்பான தகவலின்பேரில் கீழ்பென் னாத்தூர் காவல் நிலைய ஆய் வாளர் மஹாலட்சுமி மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், தப்பி ஓடிய முருகனை தேடி வந்தனர்.

இதற்கிடையில், முருகன் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப் பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x