கடலூர், விழுப்புரத்தில் திரையரங்குகள் திறப்பு

விழுப்புரத்தில் திறக்கப்பட்ட திரையரங்கை ஆய்வு செய்யும் வருவாய்த்துறையினர்.
விழுப்புரத்தில் திறக்கப்பட்ட திரையரங்கை ஆய்வு செய்யும் வருவாய்த்துறையினர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 17-ம்தேதி முதல் திரையரங்குகள் மூடப் பட்டன.

238 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுதல் வழக்கம்போல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விழுப்புரம் நகரில் உள்ள6 திரையரங்குகளில் ஒரு திரையரங்கு மட்டும் நேற்று திறக்கப்பட்டது. ஆங்கில திரைப்படம் திரையிடப்பட்டது. மக் களிடம் போதிய வரவேற்பு இல்லை. அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவிழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந் திரன் திரையரங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட் டால் ரசிகர்கள்கூட்டம் வழக்கம் போல வரும் என திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடலூர் திரையரங்கில்

இலவச அனுமதி

ரசிகர்களை கவர கடலூர் கிருஷ்ணாலயா திரையங்கில் தீபாவளி வரை இலவச காட்சி என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in