

கரோனா அச்சம் காரணமாக விழுப்புரம் உழவர்சந்தை தற்காலிகமாக பீமநாயக்கன் தோப்பு நகராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது.
ஆனால் அங்கு மழைநீர் தேங்குவதால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் பழங் கள் அழுகி விடுகின்றன.
தற்போது கரோனா தாக் கம் குறைந்துள்ள நிலையில் உழவர் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்க வலியுறுத்தி நேற்று காலைவிவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த காய்கறி களை தற்காலிக உழவர் சந்தை முன்பு வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வேளாண்துறை மற்றும் காவல்துறையினர் விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர.
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு தற்கா லிக உழவர் சந்தையில் விவ சாயிகள் விற்பனையை தொடங்கினர்.
மழைநீர் தேங்குவதால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.