மேலூரில் தங்கியிருந்த அறையில்  கிரானைட் குவாரி  உரிமையாளர் மரணம்

மேலூரில் தங்கியிருந்த அறையில் கிரானைட் குவாரி உரிமையாளர் மரணம்

Published on

மேலூரில் தங்கியிருந்த அறையில் கிரானைட் குவாரி உரிமையாளர் இறந்து கிடந்தார்.

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங் கட்ராமன் மகன் பாலகி ருஷ்ணன் (45). இவர், மேலூர் அருகிலுள்ள வெள்ளலூர் பகுதியில் கிரானைட் குவாரி நடத்தி வந்தார். இதற்காக, அவர் மேலூரில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் அறையில் இருந்த அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் மேலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு கழிவறைக்குள் பால கிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவர் கழிவறைக்குச் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மேலூர் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in