கடலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் தீபாவளி இனிப்புகள் 5 டன் விற்பனை செய்ய இலக்கு

சேத்தியாத்தோப்பில் உள்ள கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தீபாவளி இனிப்புகள் அறிமுகம் செய்யப் பட்டன.
சேத்தியாத்தோப்பில் உள்ள கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தீபாவளி இனிப்புகள் அறிமுகம் செய்யப் பட்டன.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வகைகளான மைசூர் பாகு,முந்திரி கேக், திருப்பதி லட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மைசூர்பாகு 2 டன், முந்திரி கேக் 1 டன், திருப்பதி லட்டு 2 டன்னும் தீபாவளிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால் கிலோ மைசூர்பாகு ரூ. 120, கால்கிலோ முந்திரி கேக் ரூ. 180, கால்கிலோ திருப்பதி லட்டு ரூ.150 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பில் உள்ள கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், சங்க தலைவர் (ஆவின் தலைவர்) பச்சமுத்து தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை நேற்று அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார்.பின்னர் ரூ. 40 லட்சத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய அலுவலகம், கணினி அறை, மற்றும் இயக்குநர் பங்கேற்கும் கூட்டஅறை உள்ளிட்டவை திறந்துவைக்கப்பட்டது.உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தின் இயக்குநர்கள் வேல்முருகன், சந்திரபாபு, செல்வராஜ், பெருமாள்ராஜ், பூங்கொடி, மலர்க்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயக்குநர்கள் கணேசன், செல்லதுரை, முனுசாமி, சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in