கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

ஆட்சி யர் அலுவலகம் கட்ட, கோயில் நிலத்தை கையகப்படுத்த இந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோயில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சே பனைக் கூட்டமும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் அர்த்த நாரீஸ்வரர் கோயில் நிலத்தை மீட்டு திருப்பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி அமைப்பு மற்றும் மாவட்ட தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு தலைவர் கடேஸ்வரா தலை மையில் நேற்று கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அவர்கள் அதே பகுதியில் அமர்ந்து சிவாய நம என கோஷமிட்டு, கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி முழக்கமிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in