

மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமைக் காவலர் களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் காவ லராகப் பணியில் சேர்ந்து, எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் 25 ஆண்டுகள் பணியாற்றி தற்போது தலைமைக் காவலர்களாக இருப் போருக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்( (எஸ்.எஸ்.ஐ.) பதவி உயர்வு வழங்கப்படும். இதன்படி மாநிலம் முழுவதும் 1995-ல் பணியில் சேர்ந்த ஏராளமான முதன்மைக் காவலர்களுக்கு சமீபத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை நகரில் 16 பேர், மதுரை புறநகரில் 35 பேர் அடங்கிய பட்டியல் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்காக பரிந்துரை செய்யப்பட்டு டிஐஜி அலுவலகத்துக்கு அனுப்பப் பட்டது. இதில் நகர்ப்புறத்தில் உள்ள 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், புறநகரில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட தலை மைக் காவலர் கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை புறநகரில் பதவி உயர்வுப் பட்டியலில் இடம் பெற்ற வர்களில் சிலர் மீது புகார்கள் உள்ளதாகவும், அது குறித்து விசாரித்து திருத்தப்பட்ட புதிய பட்டியலை அனுப்புமாறும் டிஐஜி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பணிகளை எஸ்பி. அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.