மதுரையில் சாலை விபத்துகளில்  ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

மதுரையில் சாலை விபத்துகளில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

Published on

மதுரையில் ஒரே நாளில் வெவ் வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் பாலகுருசாமி (37), இவர் ராஜபாளையம் அருகி லுள்ள சோலைராஜபுரத்தில் வசிக்கும் மாமனாரைப் பார்க்க குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காரில் சென்றார்.

மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பாலகுருசாமி ஓட்டிச்சென்ற கார் மீது மோதியது. இதில் பாலகுருசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த இவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் ஹர்ஸிதா (10), வைசாலி (6) மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். சிலைமான் போலீ ஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் ராஜஸ்தானைச் சேர்ந்த கங்பத் சிங்கை கைது செய்தனர்.

மதுரை அருகேயுள்ள கீழமாத் தூரைச் சேர்ந்தவர் சோலை (50). இவர் நேற்று முன்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் அதே பகுதியிலுள்ள காளியம்மன் கோயில் அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியதில் சோலை அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (42). இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் - மதுரை நான்குவழிச் சாலையில் பைக்கில் சென்றார். வடுகபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சென்றபோது கட்டுப் பாட்டை இழந்து அவரது பைக் கவிழ்ந்தது. தலையில் படுகாயமடைந்து அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீஸார் விசாரிக் கின்றனர்.

மதுரை மாவட்டம் பேரை யூரைச் சேர்ந்தவர் சுந்தரம், நேற்று முன்தினம் பேரையூர்- உசிலம்பட்டி சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, மலையம்மாள் கோயில் அருகே பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் சுந்தரம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பேரையூர் போலீஸார் விசாரிக் கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in