திருச்சி கே.கே.நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிகள் திறப்பு குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி கே.கே.நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிகள் திறப்பு குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

பள்ளிகளை திறக்க 50% பெற்றோர் ஆதரவு கரோனா அச்சத்தால் அதே அளவு எதிர்ப்பும் நிலவுகிறது

Published on

பள்ளிகளை நவ.16-ம் தேதி திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களுடைய கருத்துகளை கேட்டறிவதற்காக தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக பெற்றோர் களிடம் அளிக்கப்பட்ட படிவத் தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க சம்மதத்தை தெரிவிப்பதற்கும், சம்மதம் இல்லாவிடில் அதையும் பதிவு செய்து அதற்கான காரணத்தை குறிப்பிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

சென்னை பள்ளிகளில் நடை பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஒருசில பெற்றோர்கள் கூறிய போது, “மாணவர்களின் படிப்பு முக்கியம். தாய்- தந்தை இருவரும் வேலைக்குச் செல்லக்கூடிய குடும்பங்களில் குழந்தைகளை வீட்டில் பராமரிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. தொடர்ந்து 8 மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகள் மிகவும் தொல்லைப்படுத்துகிறார்கள். ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் முழுமையாக பங்கேற்பதில்லை. பள்ளிகளுக்கு சென்றால்தான் அவர்கள் படிப்பார்கள். எனவே, கண்டிப்பாக வரும் 16-ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்” என்றனர்.

அதேநேரத்தில் வேறுசில பெற்றோர்களின் கருத்து இதற்கு நேர்மாறாக உள்ளது. அவர்கள் கூறியபோது, “குழந்தைகளின் படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா என்றால் உயிர்தான் முக்கியம். பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கரோனா பரவினால் அதற்கு யார் பொறுப் பேற்பது. ஆந்திரத்தில் பள்ளி களைத் திறந்ததால் ஆசிரியர் களுக்கும், மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதை பார்த்துவிட்டோம். கரோனா 2-வது அலை வரும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். மழைக்காலமும் வந்துவிட்டது. ஏற்கெனவே 8 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் 2 மாதங் கள் கழித்து பள்ளிகளை திறக் கலாமே” என்றனர்.

இதற்கிடையே, பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சமஅளவில் இருந்ததாக கருத்துக் கேட்பு கூட்ட களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆதரவும், எதிர்ப்பும் சமமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு விஷயத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என ஏறத்தாழ 12,500 பள்ளிகளில் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில்...

அரியலூர், பெரம்பலூரில்...

பெரம்பலூரில் உள்ள 157 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். எசனை, பூலாம்பாடி, அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் ஆய்வு செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in