வீராணம் ஏரியில் 3.70 லட்சம் மீன்குஞ்சுகள்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி படகில் சென்று மீன்குஞ்சுகளை விட்டார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி படகில் சென்று மீன்குஞ்சுகளை விட்டார்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் நேற்றுமீன்குஞ்சுளை மாவட்ட ஆட்சி யர் சந்திரசேகர் சாகமூரி விட்டார். இந்நிகழ்வில் அவர் தெரிவித் ததாவது:

மீன்வளத்துறை மூலம் வீரா ணம் ஏரியில் 18.65 லட்சம் விரலிகள் இருப்பு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள லால்பேட்டை, சித்தமல்லி, உடை யார்குடி, சேத்தியாத்தோப்பு, புடையூர், ஓமாம்புலியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,376 உறுப்பி னர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங் கப்படுகிறது.

இதுவரை இரண்டு கட்டங் களாக 8.65 லட்சம் விரலிகள் விடப்பட்டன. தற்போது மூன் றாம் கட்டமாக 3.70 லட்சம் விரலிகள் விடப்பட்டுள்ளன.

இதன் மூலம் உள்ளாட்டு மீனவர்கள், பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.

மேலும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in