

தெற்கு கோட்ட ரயில் நிலையங் களில் தண்டவாளங்களில் சிக்னல்களை சரியாக இயக்க உதவும் ‘இன்டர் லாக்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது.
ரயில்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதற் காக ரயில் நிலையங்களில் மின்னணு ‘இன்டர் லாக்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் நிர்வாக வசதிக் காக 3 அல்லது 4 ரயில் பாதைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ரயில் பாதைகளை இணைப் பதற்கு பாயிண்ட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரயில் நிலையத்துக்கு அடுத்தடுத்து வரிசையாக வரும் ரயில்களை முறையாக அனுமதிக்க சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளுடன் கூடிய சிக்னல்கள் பயன்படுத்தப்படும். ‘இன்டர் லாக்கிங்’ என்பது பாயிண்ட் இணைப்புகள், சிக்னல்களை சரியாக இயக்க உதவும் அமைப்பு. மனிதத் தவறுகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க இந்த மின்னணு ‘இன்டர் லாக்கிங்' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்கிங்-ஐ சோதனை செய்ய, அதைத் தயாரிக்கப்பட்ட இடத்துக்கே எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் கால விர யம் ஏற்படும்.
இதைத் தவிர்க்கும் பொருட்டு, திண்டுக்கல்லில் சோதனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை முதன்மை சிக்னல், தொலைதொடர்பு பொறியாளர் ஆர்.பாஸ் கரன் தொடங்கிவைத்து ஆய்வு செய்தார். இந்தச் சோதனை நிலையம் 2 கணினிகள் மூலம் செயல்படும்.
மதுரைக் கோட்டத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள மின்னணு ‘இன்டர் லாக்கிங்' முறையை, இம்மையம் மூலம் சோதனை செய்து கொள் ளலாம். இந்தத் திட்டம் ‘ஆத்ம நிர்பார் இந்தியா' என்ற சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இம் மையம் ஊழியர்களுக்கு பயிற்சிக் களமாக இருப்பதோடு, ரயில் நிலையங்களின் பிற்கால ரயில் பாதை விரிவாக்கங்க ளுக்கும் உதவும் என தொலைத் தொடர்பு பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.