

அண்ணா பதக்கம், கபீர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் கபீர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பதக்கம் மற்றும் விருதுக்கு தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க www.awards.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த இணையதளம் www.awards.tn.gov.in என்ற மாவட்ட இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் இணையதளத்தை பயன்படுத்தி டிச. 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.