ஊர்க்காவல் படைக்கு ஆள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆள் தேர்வு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை:

திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் (தென்காசி மாவட்டம்) சேர்ந்து சேவை செய்வதற்காக திருநெல் வேலி ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட திருநெல்வேலி தாலுகா, தாழையூத்து, சிவந்திபட்டி, சீவலப்பேரி, மானூர், தேவர்குளம், கங்கைகொண்டான், சீதபற்பநல்லூர் பகுதியில் இருந்து ஆண்களும், தென்காசி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர்வடகரை, இலத்தூர் பகுதிகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும், 45 வயதுக்கு உட்பட்டவ ராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 10-ம் வகுப்பு. அரசுத் துறையில் பணிபுரிபவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

இப்பிரிவில் சேவை செய்ய விரும்புவோர் பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றிதழ் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவை வரும் 16-ம் தேதி பகல் 12 மணிக்குள் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in