Published : 09 Nov 2020 03:13 AM
Last Updated : 09 Nov 2020 03:13 AM

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவோம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வலியுறுத்தல்

திருவண்ணாமலை

தமிழர்களின் முக்கிய பண்டிகை யான தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவோம் என தி.மலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழர் களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றா கும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங் களில் கூறப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில், தீபங்களுடன் தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக நடை முறையில் உள்ளது.

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் ஒலியால் காது கேட்கும் திறன் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசினை தடுக்க, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இது தொடர்பாக மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

உச்ச நீதி மன்றம் உத்தர வின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக் கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை, குடும் பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்களுடன் பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து, வண்ண ஒளி தீபங் களால் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்” என தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x