Published : 09 Nov 2020 03:13 AM
Last Updated : 09 Nov 2020 03:13 AM

கல்வியியல் கல்லூரி இயக்குநர் பெயரில்போலி முகநூல் கணக்கு தொடக்கம் காவல் துறையினர் விசாரணை

வேலூர்

வேலூர் கல்வியியல் கல்வி இயக்குநரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பண உதவி கேட்டு வெளியான தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி காந்திநகர் பகுதியில் கல்வியியல் கல்வி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. இந்த அலுவலகத்தில் கல்வியியல் கல்வி இயக்குநராக பணியாற்றி வருபவர் எழிலன். இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் முகநூல் (பேஸ்புக்) கணக்கு ஒன்றை போலியாக தொடங்கியுள்ளார்.

அதன் மூலம் எழிலன் குறிப் பிடுவததைப்போல "சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே, நண்பர்கள் எனக்கு பண உதவி செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளதைப்போல தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை கவனித்த எழிலனின் முகநூல் நண்பர்கள் இதுகுறித்து அவருக்கு தெரிவித்தனர்.இதைக்கண்ட கல்வியியல் கல்லூரி இயக்குநர் எழிலன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் எழிலன் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்வியியல் கல்வி இயக்குநர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண உதவி கேட்டு தகவல் பரப்பிய நபர் யாரென விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சலசலப்பை எற்படுத்தியுள்ளது

இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் ஏடிஎஸ்பி ஒருவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x