ரப்பர் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டயர் ரீட்ரேடிங் சங்கம் கோரிக்கை

ரப்பர் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  டயர் ரீட்ரேடிங் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

ரப்பர் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டயர் ரீட்ரேடிங் தொழில் லாரி உரிமையாளர்களுக்கு பக்கபலமாய் உள்ள தொழில். கரோனா காலகட்டத்தில் லாரிகளுக்கு சரியான லோடு கிடைக்காததால் வாகனங்களை இயக்க முடியவில்லை. இச்சூழல் தற்போதுவரை நீடித்து வருகிறது.

இதனால் டயர் ரீட்ரேடிங் நிறுவனங்களுக்கு சரியான வகையில் டயர் வராததால் தொழில் முடங்கியுள்ளது. இதன்காரணமாக டயர் ரீட்ரேடிங் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இச்சூழலில் இயற்கை ரப்பர் தட்டுப்பாடு காரணத்தினால் ரப்பர் நிறுவனங்கள் ரப்பர் விலையை திடீரென உயர்த்தி உள்ளன. எனவே, டயர் ரீட்ரேடிங் விலையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மோட்டார் வாகனங்கள் சரிவர இயங்காமல் இருக்கும் சூழலில் ரீட்ரேடிங் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி, டயர் ரீட்ரேடிங் தொழிலில் ஈடுபடுவோருக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ரப்பர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in