கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே காவல்துறை சார்பில் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள் நாடகம், கலைநிகழ்ச்சி நடத்தினர். கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மனோகரன் ரத்னா பள்ளி நிர்வாகி ராமசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.