

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமி பகுதிநேரமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். அந்த சிறுமியை அதே கடையில் வேலை செய்து வந்த திருச்சிஅரியமங்கலம் கணபதி நகரில் வசிக்கும் சந்திரன் மகன் சேர்மராஜா(22) என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், நவ.1-ம் தேதி அந்த சிறுமியை சேர்மராஜா கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. சமயபுரத்தில் தங்கியிருந்த சிறுமியை அவரது பெற்றோர் நேற்று முன்தினம் மீட்டனர்.
பின்னர், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மகளிர் போலீஸார், சேர்மராஜாவை நேற்று போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.