

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு குடியிருப்பு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த வாரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தரமில்லாமல் அமைக்கப்பட்ட அந்தச் சாலையில் பல்வேறு இடங்களில் புற்கள் முளைத்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.