

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,15-வது நிதிக் குழுவில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சங்கர் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடலூர் ஊராட்சியில், 47 பசுமை வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பசுமை வீடுகளை ஒதுக்கீடு செய்வதில், ஊராட்சி மன்றத் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்வதாக ஊராட்சிமன்றத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் முறைகேடு நடப்பதாக கண்டனம் தெரிவித்து பெரும்பாலான ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிய வளர்ச்சி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.