சீர்மரபினர், பழங்குடியினர் கணக்கெடுப்பு நடத்த அதிகாரியை நியமிக்க கோரிக்கை

சீர்மரபினர், பழங்குடியினர் கணக்கெடுப்பு நடத்த அதிகாரியை நியமிக்க கோரிக்கை
Updated on
1 min read

முத்தரையர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.

வீர முத்தையர் முன்னேற்ற சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவர் காஞ்சி காடக முத்தரையர், மாநில பொதுச் செயலாளர் மரு.பாஸ்கரன், மாநில நிர்வாகி அம்பலத்தரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் சீர்மரபினர், பழங்குடியினர், பூர்வீக பழங்குடியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்த அதிகாரியை நியமித்து, வரும் டிச.31-க்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும்.

முத்தரையர் சமுதாய மக்கள்தொகையை 15 லட்சம் என தவறாகக் கூறும் 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கையை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது.

கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையான வலையர் புனரமைப்பு வாரியத்தை உடனே உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in