தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரை கருணாஸ் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரை கருணாஸ் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரையை நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்,

புதுக்கோட்டையில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மருது சகோதரர்களுக்கு சிலை வைத்தல் போன்ற சமுதாயம் சார்ந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சியோடுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். முதல்வர் பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, பழனிசாமியையும், சசிகலாவையும் நான் ஆதரிப்பதில் தவறில்லை.

தமிழக பாஜக தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் தேசிய தெய்வீக ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.

அரசியல் என்பது நடிகர் ரஜினிகாந்துக்கு அறியாத, புரியாத, தெரியாத ஒன்று. எனவே, அவர் அரசியலுக்கு வராமல் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகனாகிய எனது விருப்பம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in