

கடலூர் மாவட்டத்தில் பிஎஸ் என்எல் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 175 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் திடீர் வேலை நீக்கம் செய்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக நிலு வையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டும். அனைவரையும் பணியில் சேர்க்கக்கோரியும் கடலூரில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்தை நேற்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்மந்தம், ஒப்பந்த தொழிலாளர் சங்கமாவட்ட நிர்வாகிகள் குழந்தைநாதன், விஜய் ஆனந்த், குருபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.