

நவ.26-ல் அகில இந்திய வேலைநிறுத்தம், 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இன்றைய நிலை குறித்த விளக்கக் கருத்தரங்கம் மதுரை பழங்காநத்தத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தொமுச பொதுச்செயலாளர் வி.அல்போன்ஸ் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சிஐடியு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், தொமுச மாநில நிர்வாகி நடராஜன், எம்எல்எப் மாநிலத் தலைவர் ஆவடி அஞ்சரிதாஸ் ஆகியோர் பேசினர். இதில் ஏஐடியூசி பொதுச்செயலாளர் எம்.நந்தாசிங், டிடிஎஸ்எப் பொதுச்செயலாளர் சம்பத், ஏஐஎல்எல்எப் சங்க நிர்வாகி முத்தையா, எச்எம்எஸ் சங்க நிர்வாகி ஷாஜகான், எம்எல்எப் மாநில துணைப் பொதுச்செயலாளர் மகபூப்ஜான் மற்றும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், காரைக்குடி கோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகசுந்தர் நன்றி கூறினார்.