

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்பி சுகுணாசிங் உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 117 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,091 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று, தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.