குண்டாறு அணையில் குளித்த போது நீரில் மூழ்கி சிறுவன் மரணம்

குண்டாறு அணையில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்.
குண்டாறு அணையில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த அணைக்குச் சென்று குளிப்பது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக அணையில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குபோலீஸார் எப்போதாவது பாதுகாப்பு பணிக்குச் செல்கின்றனர். இதனால், தடையை பொருட்படுத்தாமல் குண்டாறு அணையில் பலர் குளித்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் மதியம் செங்கோட்டை கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அணைக்குச் சென்று குளித்துள்ளனர். மாலையில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது, நவாஸ்கான் என்பவரது மகன் ஜிப்ரில் (15) என்பவரை மட்டும் காணவில்லை. இதுபற்றி உடன் சென்ற ஜிப்ரில் நண்பர்களிடம் நவாஸ்கான் கேட்டபோது, ‘நாங்கள் அனைவரும் குண்டாறு அணையில் குளித்துக்கொண்டு இருந்தோம். ஆனால் வீட்டுக்கு திரும்பி வரும்போது ஜிப்ரில் எங்களோடு வரவில்லை’ என்று கூறியுள்ளனர். இதனால் அவரதுபெற்றோர், உறவினர்கள் குண்டாறுஅணை பகுதியில் தேடினர்.

செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் அரிகரன் செங்கோட்டை, தென்காசி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் குண்டாறு அணைப் பகுதிக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. நீண்ட தேடுதலுக்கு பின் நேற்று மாலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in