கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறைத் திருநாளையொட்டி திருநெல்வேலியில் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 					            படம்: மு.லெட்சுமி அருண்
கல்லறைத் திருநாளையொட்டி திருநெல்வேலியில் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதிஅனைத்து ஆத்மாக்கள் தினம்,கல்லறைத் திருநாளாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. திருநெல்வேலியில் கல்லறைத் தோட்டங்களில் உள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலைகள் அணிவித்தும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிலர் அன்னதானம் வழங்கினர். அருட்தந்தையர்கள், போதகர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்களது மூதாதையர்கள், உறவினர்களின் கல்லறைகளை சீரமைத்து, மெழுகுவத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை மையவாடியில் உள்ள கல்லறைத் தோட்டம்,ஜார்ஜ் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் உட்பட அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in