திருவள்ளூர் மாவட்டத்தில் விடுதிகளின் விவரங்களை இணையத்தில் பதிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில்  விடுதிகளின் விவரங்களை இணையத்தில் பதிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், தங்களின் விடுதி விவரங்களை www.nidhi.nic.in, www.saathi.qcin.org ஆகிய இணையதளங்களில் பதிவுசெய்ய வேண்டும்.

‘SAATHI’ இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு இந்திய அரசின் சுய சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த நற்சான்றின் மூலம், விடுதி உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்ள முடியும். மேலும், சுற்றுலா அமைச்சகம் வழங்கும் பயிற்சிகளில் பணியாளர்களை பங்குபெறச் செய்து பயன்பெறலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை to.thiruvallur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர்-602001, தொலைபேசி எண்: 044- 27666007 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in