

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர்.
இறந்தோரை என்றும் மறந் தாரில்லை என்பதற்கேற்ப இந் நாளில் கல்லறைகளுக்குச் சென்று மலர்களால் அலங் கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி முன்னோருக்கு அஞ்சலி செலுத் துவதை கல்லறை திருநாள் அன்று கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆண்டு கரோனா காரண மாக தேவாலயத்தில் மட்டும் திருப்பலி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேவாலயங்களிலும் காலை 5.30 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறும்.