கிசான் நிதி திட்ட முறைகேடு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.24.77 கோடி பறிமுதல்

கிசான் நிதி திட்ட முறைகேடு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.24.77 கோடி பறிமுதல்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்துபணத்தை திரும்பப் பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங் களிலும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு இத்திட்டத்தில் இணைந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக சேர்க் கப்பட்ட 1,08,500 பேரில் இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளே அல்லாதவர்கள் 70 ஆயிரம் பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேரும்என 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள் ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்கின் மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளது தெரியவந்தது. இவர்களுக்கு வழங்கப் பட்ட உதவித்தொகையை திரும்பபெறும் பணியில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.

அந்த வகையில் கடந்த 23-ம் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 71,200 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அந்த கணக்குகளில் இருந்து ரூ.22 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மேலும் 4,857 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 75 லட்சம் திரும்பப் பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 76,057 பேரிடம் இருந்து ரூ.24 கோடியே 52 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in