

கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மற்ற நகராட்சியில் வழங்குவது போல் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் விடுப்புவழங்க வேண்டும்.
வருங்கால வைப்புநிதி கணக்குடன் வட்டியும் சேர்த்து ஒவ்வொரு நபருக்கும் உத்தரவு நகல் வழங்க வேண்டும். மாதாந்திர ஊதியத்தை 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.நகராட்சியில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக்குழு ததுப்புரவு பணியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.