மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினை வரவேற்க சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம் அதிமுக பேனரை கிழித்த திமுகவினர்கண்ணில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன்.

Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்கச் சென்ற முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிக்கி காயமடைந்தார்.

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் மதுரைக்கு விமானத்தில் நேற்று வந்தார். அதே விமானத்தில் முதல்வர் பழனிசாமியும் வந்திருந்தார். ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் மதுரை விமான நிலையம் முன் திரண்டனர். அப்போது தொண்டர்கள் முண்டியடித்துச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் சிக்கினார். அப்போது அவரது கண் கண்ணாடி உடைந்து கண்ணில் காயம் ஏற்பட்டது. அவரை போலீஸார் தாக்கிவிட்டதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், அங்கிருந்த அதிமுகவினரின் பேனர்களை கிழித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. உண்மையான காரணம் தெரிந்த பிறகு திமுகவினர் அமைதியடைந்தனர். காயமடைந்த ராமகிருஷ்ணனை திமுகவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in