

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 179 பேருக்கு புதிய செல்போன்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அதிமுக அரசின் சாதனைகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருவண் ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவிந்திருந்தார். அதன்படி, 179 பேருக்கு புதிய செல்போன்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அப்போது அவர், "அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.