லக்கிம்பூர் கெரி கலவர வழக்கு - அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

லக்கிம்பூர் கெரி கலவர வழக்கு -  அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் :  ராகுல் காந்தி வலியுறுத்தல்
Updated on
1 min read

‘‘உ.பி. லக்கிம்பூர் கெரியில் ஏற்பட்ட கலவர விவகாரத்தில் மத்தியஇணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு குற்றவாளி. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி விவசாயிகள் மீது கார் மோதியது. அதில் 4 விவசாயிகள், பத்திரிகையாளர் ஒருவர் இறந்தனர். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தில் பாஜக.வினர் 3 பேர் அடித்துக் கொல்லப் பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, ‘‘கார் விபத்து திட்டமிட்ட செயல். அலட்சியம் அல்ல’’ என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப் பித்தது.

இந்த விவகாரத்தை மக்களவை யில் நேற்றுமுன் தினம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். அத னால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், லக்கிம்பூர் கெரி கலவர விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘லக்கிம்பூர் கெரியில் ஏற்பட்ட கார் விபத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு தொடர்பு இருக்கிறது. அவர் ஒரு குற்றவாளி. எனவே, அவரை மத்திய அரசு பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று வலி யுறுத்தினார்.

அதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தால் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in