Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM
திருப்பதி: சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 34 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு திருப்பதி அதிரடிப்படை ஆர்.ஐ சுரேஷ்குமார் தனது குழுவினருடன் அலிபிரியிலிருந்து வாரி மெட்டு வரை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அர்விந்த் கண் மருத்துவமனை எதிரே வனப்பகுதியில் சிலர் வாகனத்தில் செம்மரங்களை கடத்த முயற்சித்துக் கொண்டிருந்துள்ளனர். உடனடியாக அந்த கும்பலை அதிரடி படையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 34 செம்மரங்களையும், வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் மூவரும் திருவண்ணாமலையை சேர்ந்த பால முருகன் (24), வெங்கடேஷ் (27), அண்ணாதுரை (43) என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வெங்கட் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடத்தல் கும்பலை கண்டதும் சுற்றி வளைத்து பிடித்த அதிரடிப்படை குழுவை எஸ்பி சுந்தரராவ் வெகுவாக பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT