நாடு முழுவதும் புதிதாக 11,903 பேருக்கு கரோனா : 98.22% பேர் குணமடைந்தனர்

நாடு முழுவதும் புதிதாக 11,903 பேருக்கு கரோனா :  98.22% பேர் குணமடைந்தனர்
Updated on
1 min read

இந்தியாவில் புதிதாக 11.903 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14,159 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 98.22% ஆக இருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 3,36,97,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1.51 லட்சம் பேருக்கு சிகிச்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in