Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் சபரி ஐயப்பன் திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மலையாள காலண்டர்படி துலா மாத பிறப்பை முன்னிட்டு, துலா பூஜைக்காக சபரி ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது, ஆகம விதிகளின்படி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) வி.கே.ஜெயராஜ் பொட்டி, விளக்கு ஏற்றி சடங்குகள் செய்வார். அடுத்த நாள் 17-ம் தேதி முதல் வழிபாடுகள் நடைபெறும். அன்று முதல் காலை 5 மணியில் இருந்து பக்தர்களுக்கும் தரிசனத்துக்கான அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண் டும். இந்த சான்றுகள் இல்லாத பக்தர்கள் கோயிலுக்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், 17-ம் தேதி தேவஸ்வம் தலைவர் என்.வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவார். துலா மாத பூஜைகள் முடிந்த பிறகு அக்டோபர் 21-ம் தேதி கோயில் நடை மூடப்படும். அதன்பிறகு நவம்பர் 2-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x