Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக முன்னாள் ஐஏஎஸ் அமித் காரே நியமனம் :

புதுடெல்லி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமித் காரே பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்தது.

மத்திய அரசுத் துறை செயலாளர் நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பணிபுரிவார். கடந்த 1985-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அமித் காரே பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடைசியாக மத்திய கல்வித் துறை செயலாளர் பதவியிலிருந்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். மத்திய கல்விக் கொள்கை 2020 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளராக பதவி வகித்தபோது, டிஜிட்டல் ஊடகங்களுக்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x