Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
கரோனா தடுப்பூசிக்கு கர்ப்பிணிகள் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித் துள்ளது.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் போது ஏராளமான கர்ப்பிணிகளுக்கும் வைரஸ் தொற்று பரவியது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வில் தெரிய வந்தது. எனவே கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அந்த குழு மத்திய சுகாதாரத் துறையிடம் அண்மையில் சமர்ப்பித்த பரிந் துரைகளில், கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று வலியுறுத்தியது.
இதன்பேரில் மத்திய சுகாதாரத் துறை சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது.
அதில் ‘‘உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய், கை, கால்களில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் உடைய கர்ப்பிணிகள், 35 வயதுக்கு மேல் உள்ள கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்றால் ஆபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே முன்கள பணியாளர்கள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
கiர்ப்பிணிகள் கோவின் இணைய தளத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப் பூசி போடப்படுகிறது. பாலூட் டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போட சுகாதாரத் துறை ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. இந்தபட்டியலில் கர்ப்பிணிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கான கரோனா தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் குஜராத்தை சேர்ந்த ஜைடஸ்கேடில்லா நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்தை12 வயது முதல் 18 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்காக மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT