Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

3 வென்டிலேட்டர்களை தயாரித்துள்ள இஸ்ரோ :

இஸ்ரோவின் விக்ரம் சாராபாய்விண்வெளி ஆய்வு மையம்(விஎஸ்எஸ்சி) திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. இந்த அமைப்பு மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை அண்மையில் உருவாக்கியது. பிராணா, வாயு, ஸ்வாஸ்தாஎன்ற பெயர்களில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு வென்டிலேட்டர் ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படும் நிலையில், இதை ஒரு லட்சத்துக்கு வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விஎஸ்எஸ்சி.யின் இயக்குநர் சோம்நாத் கடந்தமாதம் கூறும்போது, “எங்கள்வென்டிலேட்டர்கள் சர்வசேததரத்தில் உருவாக்கப்பட்டுள் ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். வென்டிலேட்டர் தவிர ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம்" என்றார்.

இந்நிலையில் 3 வென்டிலேட் டர்களின் தொழில்நுட்பத்தை தொழில்துறைக்கு வழங்க இஸ்ரோ விருப்பம் தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x