கேரள மாநிலத்தில் முதல் முறையாக மாமனார் முதல்வர், மருமகன் எம்எல்ஏ :

கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. கூட்டணி அரசின் முதல்வராக இருந்த பினராயி விஜயன் நேற்று மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கானை சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை வழங்கினார். பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு தொடர்பான முடிவுகள் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. படம்: பிடிஐ

Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் (77), கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புதிய ஆட்சியில் பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. இவருடைய மருமகன் பி.ஏ.முகமது ரியாஸ் (44) கோழிக்கோடு பகுதியில் இடதுசாரிகள் செல்வாக்குள்ள பேபோர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் கேரள சட்டப்பேரவை வரலாற்றில் மாமனாரும் மருமகனும் இடம்பெறுவது இதுவே முதல்முறை. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முகமது ரியாஸ் திருமணம் செய்தார். பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார் வீணா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in