Published : 02 May 2021 03:13 am

Updated : 02 May 2021 03:13 am

 

Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

டெல்லியில் கரோனா பரவல் அதிகரிப்பால் : மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு :

புதுடெல்லி: நாட்டிலேயே வைரஸ் பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி உருவெடுத்துள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இங்கு வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கடந்த மாதம் 19-ம் தேதி முதன் முதலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மேலும் ஒரு வாரத்துக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, இந்த முழு ஊரடங்கு வரும் 3-ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. ஆனால், வைரஸ் பரவல் எதிர்பார்த்த அளவு குறையாததால் மேலும் ஒரு வாரத்துக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.


டெல்லியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10.33 லட்சமாக உயர்ந்துள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x