Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
ஆந்திர மாநிலம், விஜய நகரத்தில் மகாராஜா அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள கரோனா வார்டில் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதில் நேற்று அதிகாலையில் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால், அவர்களது உறவினர் கள் நேற்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
இதுபோல் விசாகப்பட்டினத் தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதில் 5 நோயாளிகள் நேற்று உயிரிழந்தனர்.
இதையடுத்து தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT