Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

மனைவிகளின் சொல் பேச்சை கேட்டு : தந்தையை காட்டில் விட்டு வந்த மகன்கள் :

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கத்வால் மாவட்டம், புல்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி (62). இவருடைய மனைவி சமீபத்தில் உடல் நலம் குன்றி காலமானார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்த சுவாமி, தான் சேர்த்து வைத்த பணத்தில் நர்சிங்கி எனும் ஊரில் வீடு கட்டி மகன், மருமகள்களுடன் வசித்தார். மாமனார் இருப்பதை மருமகள்கள் விரும்பவில்லை.

கணவன்களிடம் சண்டை போட்டனர்.

வேறு வழியின்றி மனைவிகள் கூறியபடி கடந்த 5 நாட்களுக்கு முன்னர், தந்தையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விட்டு விட்டு வீடு திரும்பினர். சுவாமியும் என்ன செய்வதென்று தெரியாமல் அடர்ந்த காட்டில் பசிக்கு சில காய்கள், பழங்களை தின்றுள்ளார். ஒருவழியாக 5 நாட்களுக்கு பின்னர் விகாராபாத் எனும் ஊர் வந்துள்ளது. அங்குள்ள கோயில் முன்பு படுத்துக் கொண்டார். இதுபோல் 2 நாட்கள் கழிந்தன.

அந்த பெரியவரின் நடவடிக்கைகளை முகமது கவுஸ் என்பவர் கவனித்து வந்துள்ளார். அவரிடம் சென்று மெல்ல பேச்சு கொடுத்து நடந்த விவரங்களை அறிந்து கொண்டு கோபம் அடைந்தார்.

உடனே விகாராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று விவரங்களை எடுத்துக் கூறினார். அதை கேட்டு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும், சில போலீஸாரும், சுவாமியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அவர் சொன்னது அனைத்தும் உண்மை என விசாரணையில் தெரிய வந்தது.

அதன் பின்னர், மகன்கள், மருமகள்களுக்கு அறிவுரை கூறிய போலீஸார், அந்த பெரியவரை விகாராபாத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இதற்காக ஆகும் மாத செலவை 2 மகன்களே ஏற்க வேண்டுமென புத்திமதி கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x