Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

நாடு முழுவதும் 11,666 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி இதுவரை 28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் இதுவரை 25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா தடுப்பூசிபோடும் பணி தொடங்கிய முதல்6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட 10 நாட்களானது. ஸ்பெயினுக்கு 12 நாட்கள்,இஸ்ரேலுக்கு 14 நாட்கள், பிரிட்டனுக்கு 18 நாட்கள், இத்தாலிக்கு 19 நாட்கள், ஜெர்மனிக்கு 20 நாட்கள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 27 நாட்களானது.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 28.4 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஒடிசா, ஹரியாணா, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா சிறப்பாக ஆகிய மாநிலங்கள் செயல்படுகின்றன.

தமிழகம், டெல்லி, ஜார்க்கண்ட், உத்தராகண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டும் 67 சதவீத நோயாளிகள் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நேற்று 11,666 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,07,01,193 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,03,73,606 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,73,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,53,847 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 2,171 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 44,624 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் நேற்று 428 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,317 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 4-வதுஇடத்தில் இருந்த கேரளா தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அந்த மாநிலத்தில் நேற்று 5,771 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 9,11,362 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,35,046 பேர் குணமடைந்துள்ளனர். 72,392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் 111 பேர், டெல்லியில் 96 பேர், உத்தர பிரதேசத்தில் 168 பேர், மேற்குவங்கத்தில் 234பேர், ஒடிசாவில் 138 பேர், ராஜஸ்தானில் 134 பேர், சத்தீஸ்கரில் 439 பேர், தெலங்கானாவில் 186 பேர், ஹரியாணாவில் 87 பேர், குஜராத்தில் 353 பேர், பிஹாரில் 153 பேர், மத்திய பிரதேசத்தில் 185 பேர், அசாமில் 17 பேர், பஞ்சாபில் 188 பேர், காஷ்மீரில் 77 பேர், ஜார்க்கண்டில் 70 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x