Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரம் விவசாயிகளுடன் 19-ல் மீண்டும் பேச்சு

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, விவ சாயிகள் பிரதிநிதிகளுடனான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி நடைபெற வுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 8 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க 4 பேர்கொண்ட குழுவை அமைக்கஉத்தரவிட்டதுடன், வேளாண்சட்டங்களையும் இடைக்காலமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். விவசாய பிரதிநிதிகளுடன் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியது.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் தோமர் கூறும்போது, “விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க 4 பேர் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மத்திய அரசு வரவேற்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது மத்திய அரசுசார்பில் அனைத்து கருத்துகளையும் நாங்கள் பதிவு செய்வோம்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைக்கு முடிவு காண அரசு முயற்சி செய்யும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எப்போதும் செயல்படாது.

இவ்வாறு அமைச்சர் தோமர் கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் மத்திய அரசு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடனான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜோகிந்தர்சிங் உக்ரஹான் செய்தியாளர் களிடம் கூறும்போது, “வேளாண்சட்டங்களைத் திரும்பப் பெறமீண்டும் மத்திய அரசு மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்துவரும் 19-ம் தேதி பகல் 12 மணிக்குஅடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது” என்றார்.

மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல், சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் சார்பில் 40 விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x